கதவுகளே திறவுங்கள் இராஜா வருகின்றார்!

கதவுகளே திறவுங்கள் இராஜா வருகின்றார்!
நிலைகளே உயருங்கள் தேவன் வருகின்றார்!
சாத்தானை வென்றவர் மீண்டும் வருகின்றார்!
நீங்காத கர்த்தர் இயேசு வேகம் வருகின்றார்!

உள்ளம், இல்லம், ஜாதி, ஜனம்
உலகம் எங்கும் ஆட்சி செய்ய – கதவுகளே
உள்ளம், இல்லம், ஜாதி, ஜனம்
உலகம் எங்கும் ஆட்சி செய்ய – கதவுகளே

1. மேடுபள்ளம் திசையெங்கும் சீமமாகிடும்
கோணலானவை அனைத்தும் சீராகிடும்
தேவ மகிமை தேசமெங்கும் வெளியாகிடும்
கடவுளாட்சி பூமியெங்கும் நனவாகிடும் – கதவுகளே

2. சாத்தானின் அதிகாரம் செல்லாதினி
அவன் ஆட்டம் பூமிதனில் நிலைக்காதினி
அவன் வலிமை, ஆயுதங்கள் பலிக்காதினி
திசையெங்கும் நிரூபிப்போம் துணிவோடினி – கதவுகளே

3. கர்த்தரன்றி பூமிதனில் தேவன் யாருண்டு?
அவர் ஞானம் முன்நிற்க தர்க்கம் ஏதுண்டு?
அவர் ஆற்றல் நிகராக யார்தானுண்டு?
கர்த்தரின்றி மீட்புக்கு வழியேதுண்டு? – கதவுகளே

4. சகோதர சமத்துவம் தழைத்தோங்கிடும்
தேவப்பிதா சொந்தங்கள் தலை நிமிர்ந்திடும்
சிலுவைதரும் சன்மானம் பியுலாவனம்
தலைவணங்கும் மனிதருக்கு அவர் சீதனம் – கதவுகளே



kadhavukale thiravungkal iraja varukinrar

kadhavukale thiravungkal iraja varukinrar!
nilaikale uyarungkal thevan varukinrar!
saththanai vendravar meendum varukinrar!
neengkadha karthdhar iyesu vekam varukinrar!

ullam, illam, jathi, janam
ulakam engkum aadsi seyya – kadhavukale
ullam, illam, jathi, janam
ulakam engkum aadsi seyya – kadhavukale

1. medupallam thisaiyengkum chamamakidum
konalanavai anaiththum seerakidum
theva makimai thesamengkum veliyakidum
katavuladsi bumiyengkum nanavakidum – kadhavukale

2. saththanin athikaram sellathini
avan aadtam bumidhanil nilaikkathini
avan valimai, aayudhangkal palikkathini
thisaiyengkum nirubippom thunivodini – kadhavukale

3. karthdharanri bumidhanil thevan yarundu?
avar njanam mun nirka dharkkam eethundu?
avar aarral nikaraka yarthanundu?
karthdharinri meedbukku vazhiyethundu? – kadhavukale

4. sakodhara samaththuvam dhazhaiththngokidum
thevabbitha sonthdhangkal dhalai nimirnththidum
siluvaidharum chanmanam biyulavanam
dhalaivanangkum manidharukku avar seedhanam – kadhavukale